கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு சேவையை சீர்திருத்த பரிந்துரை

பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு சேவைகளை சீர்திருத்தி அமைக்க ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் டு மஸ்யார் பரிந்துரைத்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP

தற்போது ஜெர்மனியின் 16 பிராந்திய மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற உள்நாட்டு உளவு தகவல்களில், பெர்லின் மத்திய அரசு அதிக கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்று ஜெர்மனி செய்தித்தாள் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் டு மஸ்யார் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மத்திய காவல் துறை ஆற்றும் பணியை விரிவாக்கவும், தஞ்சக் கோரிக்கையில் தோல்வியடைந்தோருக்கு, நடுவண் அரசால் நடத்தப்படுகின்ற புறப்பாடு மையங்களும் வேண்டுமென அவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

பெர்லினில் தாக்குதல் நடத்தியவர் தஞ்சம் மறுக்கப்பட்டவர் என்றும் அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தவர் என்றும் அறிய வந்த பிறகு, அரசு பரவலான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்