இரவு கேளிக்கையகத்தில் 39 பேரை கொன்றவர் தொடர்ந்து தலைமறைவு

  • 3 ஜனவரி 2017

புத்தாண்டு இரவில் இஸ்தான்புல் இரவு கேளிக்கையகத்தில் 39 பேரை கொலை செய்த துப்பாக்கிதாரி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption இஸ்தான்புல் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி

இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு வெளிநாட்டவர் உள்பட, பலரை இது தொடர்பாக காவல் துறையினர் காவலில் வைத்துள்ளனர்.

கிர்கிஸ்தானை சேர்ந்த 28 வயதான யாக்ஹி மஷராபோவை சந்தேக நபராக முன்னதாக சில துருக்கி ஊடகங்கள் இனம் கண்டிருந்தன. அவருடைய பாஸ்போர்ட் வடிவ புகைப்படமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

ஆனால், அதிகாரிகள் இதனை உறுதி செய்யவில்லை. மஷராபோவிடம் சுருக்கமான விசாரணை மேற்கொண்ட காவல்துறை, அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடைபெற்றபோது துருக்கியில் இருக்கவில்லை என்று கிர்கிஸ்தான் ஊடகங்களிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்