மக்களிடம் உண்மை பேசுமாறு சக அதிகாரிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டன் தூதர் அறைக்கூவல்

  • 4 ஜனவரி 2017

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான திட்டம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பமான சிந்தனைகளுக்கு சவால் விடும் வகையில் செயலாற்ற வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டனின் தூதரான இவான் ரோஜர்ஸ், தனது சக ராஜிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பதவி விலகிய ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டனின் தூதரான இவான் ரோஜர்ஸ்

எதிர்பாராத வகையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஒரு கடிதம் மூலம் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 3) அறிவித்த இவான் ரோஜர்ஸ் தனது சக பணியாளர்களை மக்களிடம் உண்மையை பேசுமாறும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக எழும் தவறான வாதங்களை தைரியமாக சந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடக்கும் போது, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இருப்பது போல பிரிட்டன் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அனுபவம் வாய்ந்த மற்றும் பக்குவமிக்க சமரச பேச்சாளர்கள் இல்லை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு புதிய வணிக ஒப்பந்தத்தை உருவாக்க பிரிட்டனுக்கு ஒரு தசாப்தம் ஆகலாம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படுத்தியிருந்த கவலையை ஆதரித்து குரல் கொடுத்ததற்காக கடந்த மாதத்தில் இவான் கடும் விமர்சனத்தை சந்தித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்