சூட்கேசில் மறைத்து கடத்தப்படும் குடியேறிகள்: தொடரும் ஆப்ரிக்க மக்களின் துயரம்

குடியேறிகளைக் கடத்தும் முயற்சியில், ஒருவரை காரிலும் மற்றொருவரை ஒரு சூட்கேசிலும் மறைத்து வைத்ததற்காக மொராக்கோ நாட்டை சேர்ந்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption சீடாவில் உள்ள ஸ்பெயின் நாட்டு போலீசார் ஞாயிறு அன்று வெளியிட்ட புகைப்படம்

திங்களன்று குடியேறிகளைக் கொண்டிருந்த காரை சோதனை செய்த போது, ஒரு நபர் காரின் முன்பகுதியிலும், மற்றொருவர் காரின் பின்புறத்திலும் மறைந்துள்ளதைக் கண்டுபிடித்தனர்.

அந்தக் குடியேறிகள், கினியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. காருக்குள் மறைந்து வந்த அவர்கள் குறைந்த அளவு காற்றை சுவாசித்ததால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தனிப்பட்ட ஒரு சம்பவத்தில், ஓர் இளம் ஆப்ரிக்க நாட்டு நபர் ஒரு பெண்ணின் சூட்கேசில் மறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption காரின் டேஷ்போர்ட் பகுதியில் மறைந்து வந்த ஒரு குடியேறி (ஸ்பெயின் சிவில் பாதுகாப்பு படை புகைப்படம்

2016, டிசம்பர் 30ம் தேதி நடத்த இந்தச் சம்பவத்திற்கு பிறகு,காபோனை சேர்ந்த இந்த நபருக்கு மீண்டும் அவரச மருத்துவ உதவித் தேவைப்பட்டது.

இவரை 22 வயதான மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பெண் சீடா பகுதிக்குக் கொண்டு செல்ல முயன்றதாகவும், ஆனால் அவர் கொண்டு வந்த டிராலியுடன் இணைக்கப்பட்டிருந்த சூட்கேசை திறந்து காட்ட சுங்கத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டபோது, இது தெரியவந்தது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சஹாரா பாலைவனத்துக்குத் தெற்கே உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் சீடாவில் இருந்து மொராக்கோவை பிரிக்கும் ஆறு மீட்டர் (20 அடி) தடுப்பு சுவரை தாண்டி வர முயற்சித்த சம்பவம் நடந்த அதே நேரத்தில் இந்தச் சம்பவங்கள் நடைபெற்றன.

படத்தின் காப்புரிமை EPA
Image caption காரில் மற்றொரு குடியேறி மறைந்து கொள்ள இடம் ஏற்படுத்தப்பட்டது

ஞாயிறன்று நடந்த இந்தச் சம்பவத்தில், 1,100 குடியேறிகள் தடுப்பு சுவரைத் தாண்ட முயன்றதில், 50 மொராக்கோ நாட்டினர் மற்றும் ஐந்து ஸ்பெயின் நாட்டுக் காவலர்கள் காயமடைந்தனர்.

அவர்கள் யாரும் தடுப்பு சுவரைக் கடந்து வரமுடியவில்லை. ஆனால் இரண்டு நபர்கள் தடுப்பு சுவரில் ஏற முயற்சித்ததால், அவர்கள் காயமடைந்தனர். அவர்கள் சீடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஒரு காவலர் கண்பார்வையை இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது

2016ல் டிசம்பர் 9ம் தேதி நடந்த இது போன்ற மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் 400 ஆப்பிரிக்க குடியேறிகள் சம்பந்தப்பட்டிருந்தனர்.

ஆப்பிரிக்காவின் பாலைவன பகுதியை சேர்ந்த பலர் சட்டத்திற்கு புறம்பாக மொராக்கோவில் வசிக்கின்றனர். இவர்கள் ஐரோப்பாவிற்குள் செல்ல கடுமையாக முயல்கின்றனர். மெலில்லா என்ற ஸ்பெயின் நாட்டின் மற்றொரு வட ஆப்ரிக்க பகுதியும் - இதேபோல குடியேறிகள் இலக்கு வைக்கும் பகுதியாக உள்ளது

இந்தப் பகுதிகள்தான், ஆப்ரிக்காவில் உள்ள ஐரோப்பாவின் நிலப்பகுதி எல்லைகள் ஆகும்.

பல குடியேறிகள் தடுக்கப்படுகின்றனர். அவர்கள் மொராக்கோவிற்கு திரும்ப அனுப்பப்படுகின்றனர். தடுப்பு சுவரை மீறிக் குடியேற முயற்சி செய்பவர்கள் இறுதியில் அவர்களின் தாய்நாட்டிற்கு அனுப்பப்படுகின்றனர் அல்லது வெளியேற்றப்படுகின்றனர்.