இராக்: ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமுள்ள கிராமங்களை மீட்க ராணுவம் புதிய கூட்டணி

  • 5 ஜனவரி 2017

சிரியா உடனான எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களை ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீண்டும் கைப்பற்றும் நோக்கில் புதிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றை தொடுத்துள்ளதாக இராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

உள்ளூர் பழங்குடியின போராளிகள், ராணுவ போலிசார் மற்றும் கூட்டு ராணுவ படைகளின் ஒருங்கிணைப்புடன் இத் தாக்குதல் நடத்தப்படும்.

இந்த கூட்டுப்படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டணி படைகள் ஆதரவு வழங்கும்.

யூபரெட்டஸ் நதிக்கரையோரம் அமைந்துள்ள ஆனா, ராவா மற்றும் அல்-கயீம் ஆகிய நகரங்கள் இந்த நடவடிக்கையின் முக்கிய இலக்காக உள்ளன.

வட நகரமான மொசூலில் தீவிரவாதிகளை எதிர்த்து ராணுவம் பல வாரங்களாக மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலின் மூலம், நாட்டின் மேற்குப்பகுதியில் புதிய கூட்டணி ஒன்றை இராக் அரசாங்கம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்