துருக்கியில் குண்டு வெடிப்பு: போலிஸ் அதிகாரி உட்பட 2 பேர் பலி

  • 5 ஜனவரி 2017

துருக்கியின் மேற்கு நகரான இஸ்மீரில் நீதிமன்ற கட்டடம் ஒன்றிற்கு அருகாமையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் போலிஸார் ஒருவரும் நீதிமன்ற அதிகாரியும் உயிரிழந்துள்ளனர் என துருக்கி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குண்டு வெடிப்பில் உயிரிழந்த சக போலிஸாரை நினைத்து கண்ணீர் சிந்தும் போலிஸாரை அழைத்து வருகின்றனர்

அந்த தாக்குதலில் மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு தீவிரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் மேலும் ஒருவரை தேடி வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இஸ்தான்புல் இரவு விடுதியில் 39 பேரை பலிவாங்கிய தாக்குதலையடுத்து புதன்கிழமையன்று சந்தேகத்திற்குள்ளான 20 இஸ்லாமியவாத தீவிரவாதிகளை இஸ்மீர் போலிஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்