மனைவியை கொன்று, உடலை குளிர்பதனப் பெட்டியில் வைத்தவருக்கு ஆயுள் சிறை

  • 6 ஜனவரி 2017

தன்னுடைய பிரெஞ்சு மனைவியை கொன்று, துண்டித்த அவருடைய உடலை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்த இந்தியருக்கு ஆயுள் காலம் முழுவதற்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Dhiraj Parab
Image caption இரண்டு வயதான மகன், இந்த சம்பவம் நடைபெற்றபோது, பொடேவின் (வலது) பெற்றோரிடம் இருந்துள்ளான்

2013 ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை குற்றத்திற்கான தண்டனையை மும்பையின் புறநகரிலுள்ள தானே நீதிமன்றம் புதன்கிழமை வழங்கியது.

கிரிஷ் பொடே என்பவர் தன்னுடைய மனைவி மதுவந்தி பாதக்கை கொன்று, உடலை துண்டித்து வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழங்கறிஞர்கள் வாதிட்டனர்.

இந்த குற்றத்தை உறவினர்களிடம் தொலைபேசி மூலம் பொடே தெரிவிக்க, அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததால், இந்த சம்பவம் வெளியே தெரிய வந்தது.

ஆயுள் தண்டனை என்பது இந்தியாவில் 14 ஆண்டு சிறை தண்டனையோடு முடிந்து விடுகிறது.

ஆனால், இந்த குற்றத்தின் கொடூரத்தை கவனத்தில் கொண்டு, தானே மாவட்ட நீதிமன்ற நீதிபதி மிர்துலா பாத்தியா, பொடே உயிர் இருக்கும் வரை, வாழ்க்கை முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டுமென தீர்ப்பளித்திருக்கிறார்.

தன்னுடைய தாய் பிரெஞ்சு குடிமகள் என்பதால் பாதக் பிரெஞ்ச் பாஸ்போட் வைத்திருந்தார்.

2006 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, மும்பையின் பயேன்டர் பகுதியில் வாழ்ந்தது.

அவர்களுக்கு இருந்த இரண்டு வயதான மகன், இந்த சம்பவம் நடைபெற்றபோது, பொடேவின் பெற்றோரிடம் இருந்துள்ளான்.

கத்தியால் பொடே தன்னுடைய மனைவியை தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

பணத்திற்காகவும், பதாக் பிரான்ஸூக்கு திரும்ப வேண்டும் என்பதற்கும் இந்த ஜோடி அடிக்கடி மோதிக் கொண்டதாக காவல்துறை கூறியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்