சம்பளம் மட்டுமல்ல மருத்துவமனைகளும் தரம் உயர்த்த வேண்டும் : கென்ய மருத்துவர்கள் போராட்டம்

  • 6 ஜனவரி 2017

கென்யாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், அரசாங்கம் அறிவித்த 40 சதவிகித சம்பள உயர்வை நிராகரித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தங்களுக்கு மட்டும் சிறந்த சலுகைகள் வேண்டாம் என்றும் மருத்துவமனைகளில் போதிய அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வைப்பதற்கு முறையான வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் இன்னும் அதிக மருத்துவர்களை பணியமர்த்துவது மட்டுமின்றி அவர்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிதியுதவி அளிக்க உத்தரவு வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் விரும்புகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சம்பளம் மட்டுமல்ல மருத்துவமனைகளும் தரம் உயர்த்த வேண்டும் : கென்ய மருத்துவர்கள் போராட்டம்

தங்கள் சம்பளத்தை 300 சதவிகிதம் அதிகரிக்க 2013 ஆம் ஆண்டு போடப்பட்ட ஓர் ஒப்பந்தத்தை அமல்படுத்தும்படி ஒரு மாதத்திற்குமுன் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால், மருத்துவர்களுக்கு அவ்வளவு சம்பளம் வழங்க அரசு மறுத்துவிட்டது.

தொடர்புடைய தலைப்புகள்