கலகத்தில் ஈடுபடும் ராணுவத்தினரை சந்திக்கிறார் ஐவரி கோஸ்ட் பாதுகாப்பு அமைச்சர்

ஐவரி கோஸ்டின் வணிகத் தலைநகரான அபித்ஜனின் கடைக்கோடியில் உள்ள ராணுவ தளத்தில், துப்பாக்கிச்சூடு நடந்ததை அடுத்து, படையினரின் கலகம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐவரி கோஸ்டின் புவாகே நகரம் உட்பட மற்ற முக்கிய நகரங்களில் ஒரே இரவில் துப்பாக்கிச்சூடு நடந்தது. புவாகே நகரத்தில் கலகம் தொடங்கியது.

ராணுவப் படையினர் முக்கிய சாலைகளை தடை செய்தனர். அவர்கள் அந்த பகுதிகளில் தங்களது வாகனகளில் சுற்றி வருகின்றனர்.

ஐவரி கோஸ்டில் கலகத்தில் ஈடுபட்டுள்ள ராணுவப் படையினரை சந்திக்க, அந் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அலைன்-ரிச்சர்டு தொன்வாஹி அவர்களின் ஊதிய கோரிக்கைகளை கேட்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

படையினரின் குறைகளுக்கு செவிமடுக்க அரசு தயாராக உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். புவாகே நகரத்தில் ஒரு எம்.பி. அந்த கலகக்கார்கள் சுமார் 8,000 டாலர்கள் சம்பள உயர்வு வேண்டும் என்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு வேண்டும் என்றும் கோரியதாக கூறினார்.

அவர்கள், 2011ல் போரின் முடிவில், ராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட முன்னாள் கிளர்ச்சியாளர்கள் என்று அறியப்பட்டுள்ளது.

ஆனால் பிபிசி செய்தியாளர் அபித்ஜன் பகுதியில் உள்ள படையினர் அமைச்சரை சந்திக்க மறுத்துவிட்டதாகவும், அவர்கள் அதிபர் அலசானே ஹட்டராவிடம் பேச விரும்புவதாகவும் குறிப்பிட்டார். ஐவரி கோஸ்ட்டின் அதிபர் தற்போது கானாவின் புதிய அதிபர் பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.