பிரான்ஸின் உள்கட்டுமானத்திற்கு இணைய தாக்குதலால் ஆபத்து

  • 8 ஜனவரி 2017

கடந்த ஆண்டு பிரான்ஸ் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக நடத்தப்பட்ட 24 ஆயிரம் இணைய தாக்குதல்கள் முடியடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த தாக்குதல்கள் ஒரு நாட்டின் உதவியுடன் நடத்தப்பட்வை என்றும் அத்தகைய தாக்குதல்கள் பொறுத்துகொள்ள முடியாதவை என்றும் பாதுகாப்பு அமைச்சர் ட்ஸாங் ஈவ் ல டிரியான் கூறியிருக்கிறார்.

நாட்டின் உள்கட்டுமானம் ஆபத்தில் இருப்பதாகவும், இந்த ஆண்டு நடைபெறும் பிரான்ஸ் அதிபர் தேர்தல்களில் ஊடுருவ முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP

கடந்த ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரான்ஸூக்கு எதிரான இணையவெளி தாக்குதல்கள் இரு மடங்காகியிருப்பதாக ல டிரியான் கூறினார்.

2019 ஆம் ஆண்டு படை தலைவரின் கட்டுப்பாட்டில் வரவுள்ள சைபர்காம் எனப்படும் பிரான்ஸின் இணையவெளி திறன்களில் ஒரு தீவிரமான மாற்றத்தை கொண்டு வருவதற்கு பாதுகாப்பு அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் வாசிக்க:

இணையவெளி தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிக்கும் அமெரிக்கா

ரஷ்யாவின் தலையீட்டை உறுதி செய்தது அமெரிக்க உளவுத் துறை

தொடர்புடைய தலைப்புகள்