இஸ்ரேல்: பாலஸ்தீனரை கொன்ற சிப்பாய்க்கு தண்டனை வழங்கியதற்கு எதிராக போராட்டம், 7 பேர் கைது

நிராயுதபாணி பாலஸ்தீனர் ஒருவரை சுட்டு கொலை செய்த குற்றத்திற்கு யூத சிப்பாய் ஒருவருக்கு கடந்த வாரம் தண்டனை அளிக்கப்பட்டதற்கு எதிராக இரவு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டங்களில் 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரேல் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை EPA

இஸ்ரேல் அதிபர் ரூவன் ரிவ்லினின், டெல் அவிவ் இல்லத்திற்கு வெளியே நடைபெற்ற ஒரு போராட்டத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிபரின் இல்லத்திற்கு வெளியே சாலையை மறித்த, இந்த சிப்பாயின் டஜன்கணக்கான ஆதரவாளர்கள் கலைந்து செல்ல மறுத்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த சிப்பாய்க்கு தண்டனை வழங்கப்பட்ட கடந்த புதன்கிழமை தொடங்கி பரவலான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காவல் படையினர் அஸாரியாவுக்கு எதிரான சட்ட நடைமுறைகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக மிரட்டல்களும் விடுக்கப்பட்டு வருகின்றன.

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹூ அந்த சிப்பாய்க்கு மன்னிப்பு வழங்குமாறு கோரியுள்ளார்,