இரானின் முன்னாள் அதிபர் ரஃப்சஞ்சானி காலமானார்

  • 9 ஜனவரி 2017

இரானில் 82 வயதில் காலமான முன்னாள் அதிபர் அக்பர் ஆஷ்மி ரஃப்சஞ்சானிக்கு இரானின் மூத்த தலைவர் அயதுல்லா அலி கமெனி இறுதி மரியாதையை செலுத்தினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காலமான முன்னாள் அதிபர் அக்பர் ஆஷ்மி ரஃப்சஞ்சானி

பல முரண்பாடுகள் இருந்த போதிலும் பழமைவாதியான அயதுல்லா, மிதவாதியான ரஃப்சஞ்சானி பல போராட்டங்களை சந்தித்தவர் என அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ரஃப்சஞ்சானி, தற்போதைய அதிபர் ஹசான் ருஹானியின் முக்கிய ஆதரவாளர் ஆவார்; 1989ஆம் ஆண்டிலிருந்து 1997 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர்; அதன் பிறகும் இரான் அரசியலில் தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தியவர்; கடும்போக்கு கொள்கைகளை காட்டிலும் நடைமுறைக்கேற்ற கொள்கைகளுக்கு ஆதரவளித்தவர்.