டிரம்பின் ஆலோசகர்களுடன் போரிஸ் ஜான்சன் சந்திப்பு

  • 9 ஜனவரி 2017

பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்சன், தனது முன்னறிவிப்பற்ற நியூயார்க் பயணத்தில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் முக்கிய ஆலோசகர்களை சந்தித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை PA

டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மேலும் அவரின் தலைமை செயல்பாட்டாளர் ஸ்டீவ் பனன் ஆகியோரை ஜான்சன் சந்தித்தார்.

சிரியா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் குறித்து அமெரிக்காவின் கொள்கைகளை அவர்கள் ஆலோசித்தனர் அது "நேர்மறையாகவும் வெளிப்படையாகவும்" இருந்தது என அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான அரசியல்வாதியான நைஜல் ஃபராஷ் அமெரிக்காவிற்கான பிரிட்டனின் சிறந்த தூதராக இருப்பார் என்ற டிரம்பின் பரிந்துரைக்கு பிறகு, ஃபராஷ் டிரம்பிற்கு நெருக்கமானவர் என்ற பிம்பத்தை மாற்ற பிரட்டன் அரசாங்கம் முயற்சித்து வருகிறது.