பிரபல ஹாலிவுட் நடிகையிடமிருந்து நகைகளை கொள்ளையடித்தவர்கள் கைது

  • 9 ஜனவரி 2017

கடந்த அக்டோபர் மாதம் மேற்கு பாரிஸில் கிம் கர்டாஷியன் ஆயுத முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கிம் கர்டாஷியன்

அமெரிக்க ரியாலிட்டி டிவி நட்சத்திரமான கிம் கர்டாஷியன் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சமயத்தில் குறைந்தது இருவர் போலிஸ் உடையில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கர்டாஷியனுக்கு சொந்தமான மேற்கு பாரிஸில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த ஆண்கள், கிம்மை கட்டிப்போட்டு அவருடைய கழிவறையில் பூட்டி அடைந்துவிட்டனர்.

10 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பி உள்ளனர்.

கொள்ளை நடைபெற்ற சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட டி.என்.ஏ தடயங்களை கொண்டு கைதுகளை செய்ததாக பிரெஞ்சு போலீஸ் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட கிம் கர்டாஷியன்

பாரிஸ் பிராந்தியத்தில் அதிகாலை நேரத்தில் நடத்திய சோதனையில் அந்த நபர்கள் பிடிபட்டனர்.

அந்த சமயத்தில் தான் கொல்லப்பட்டு விடுவோம் என்பதை நினைத்து அஞ்சியதாக 36 வயதுடைய நடிகையும், இரு குழந்தைகளின் தாயுமான கிம் கர்டாஷியன் தெரிவித்தார்.

ராப் பாடகர் கன்யா வெஸ்ட்டை கிம் திருமணம் முடித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கிம் காயம் அடையவில்லை என்றாலும், கடும் அதிர்ச்சிக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.