இணைய தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு அபத்தமானது: ரஷ்யா

  • 9 ஜனவரி 2017

அமெரிக்க அதிபர் தேர்தல்களில் தலையிடுவதற்கு இணைய வலையமைப்பில் புகுந்து தகவல்களை திருட கணினி செயலியை ரஷ்யா செயல்படுத்தியதாக அமெரிக்க உளவுத் துறை நிறுவனங்கள் கூறுகின்ற குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை, அபத்தமானவை என்று கூறி ரஷ்யா நிராகரித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதில் ரஷ்ய அதிகாரிகள் ஈடுபட்டதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ள கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமீட்ரி பஸ்கோஃப், இந்த குற்றச்சாட்டுக்கள் மாய உலகத்தின் எச்சங்கள் என வர்ணித்திருக்கிறார்.

அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் இது பற்றி விளக்கம் அளிப்பதற்கு முன்னர் மாஸ்கோ இந்த இணையவெளி தாக்குதல்களுக்கு பின்னணியாக இருந்தது என்ற ஜனநாயக கட்சியின் கோரிக்கையை இழிவாக குறிப்பிட்ட, அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இதே சொற்களை பயன்படுத்தி இருந்தார்.

உளவு நிறுவனங்கள் விளக்கம் அளித்த பின்னர் ரஷ்யாவின் அமைப்புகள் இணைய தாக்குதலுக்கு பின்னால் இருந்ததை டிரம்ப் மறுக்கவில்லை என்று, புதிய பணியாளர் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள அதிகாரி தெரிவித்தார்.