காம்பிய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண அபுஜாவில் பேச்சுவார்த்தை

காம்பியாவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியாக நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Drew Angerer/Getty Images

நைஜீரிய அதிபர் முகமது புஹாரி அனுசரணையில் மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் என்ற பிராந்திய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.,

கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பிறகும், காம்பிய அதிபர் யாக்யா ஜாமே பதவியிலிருந்து இறங்க மறுத்து வருகிறார்.

காம்பியாவில் நான்காவதாக, ஒரு வானொலி நிலையம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டுள்ளது.

காம்பியாவில் மிகவும் பிரபலமான வானொலிகளில் ஒன்றான பாரடையிஸ் எஃப்எம்-யின் ஒலிபரப்பை நிறுத்திவிட காவல்துறையினர் ஆணையிட்டுள்ளதாக இதன் ஊழியர்கள் கூறியுள்ளனர்,

இதனை மூடியதற்கான காரணம் எதுவும் வழங்கப்படவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்