அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் ரஃப்சஞ்சானியின் இறுதி சடங்கு

  • 10 ஜனவரி 2017

டெஹ்ரானில் நடக்கவுள்ள முன்னாள் இரான் அதிபர் அக்பர் ஆஷ்மி ரஃப்சஞ்சானியின் பொது இறுதி சடங்கில் பெரும் அளவில் மக்கள் கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காலமான முன்னாள் இரான் அதிபர் ரஃப்சஞ்சானி

காலஞ்சென்ற ரஃப்சஞ்சானிக்கு செய்யப்படும் இறுதி சடங்கு பிரார்த்தனைகளை இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமனே மேற்கொள்வார்.

இரானின் சீர்திருத்தவாதிகள் மற்றும் மிதவாதிகள் ஆகிய இரு தரப்பினரும் தங்களின் வலிமையைக் காட்டும் வண்ணம் ரஃப்சஞ்சானியின் இறுதி சடங்கில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய ஆண்டுகளில், இவ்விரு தரப்பினரும் தங்களை வழிநடத்துவதற்காக ரஃப்சஞ்சானியின் கருத்துக்களை அறிய முற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரஃப்சஞ்சானியின் இறுதி சடங்கில் இஸ்லாமிய கடும்போக்காளர்களும் கலந்து கொள்வர்.

இந்த இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்கு, சீர்திருத்தவாதியான இரானின் முன்னாள் அதிபர் முகமது ஹடாமிக்கு தடை விதிக்கப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் வெளிவந்த சில உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்