அமெசான் காடுகள் அணைகளால் அழியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெசான் காடுகள் அணைகளால் அழியுமா?

அமெசான் பகுதியில் நீர்மின்சாரத்தேவைக்கான பிரம்மாண்ட அணைகளை கட்டப்போவதாக பிரேசில் அறிவித்திருக்கிறது.

அதன் மூலம் உருவாக்கப்படும் மாசற்ற மின்சாரம், பிரேசிலின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்கிறது அந்நாட்டு அரசு.

ஆனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அணைகள் அமேசானையே அழித்து புவி வெப்பமடைவதை வேகப்படுத்தும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

அமேசான் பிராந்தியத்திலுள்ள பெல்லோ மோண்டி பகுதியில் கட்டப்படும் பிரம்மாண்ட அணைப்பகுதியில் இருந்து பிபிசியின் பிரத்யேகச் செய்தி.