கடத்தப்பட்ட இரு வெளிநாட்டு பிரஜைகள் குறித்த காணொளியை வெளியிட்டது தாலிபான்

ஆஃப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட ஆஸ்திரேலிய நாட்டுப் பிரஜை மற்றும் அமெரிக்கா நாட்டுப் பிரஜை குறித்த காணொளி ஒன்றை தாலிபான் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை VIA AP
Image caption டிமோத்தி வீக்கெஸ் டொனால்ட் டிரம்பிடம் கோரிக்கை வைக்கிறார்.

அமெரிக்காவை சேர்ந்த கெவின் கிங் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த டிமோத்தி வீக்கெஸ் ஆகியோர் காபூலில் உள்ள ஆஃப்கானிஸ்தானின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழகத்திற்கு வெளியே தங்கள் வாகனங்களிலிருந்து பாதுகாப்பு படையினரின் சீருடைகள் அணிந்திருந்த துப்பாக்கிதாரிகளால் அவர்கள் கடத்தப்பட்டனர்.

பின்னர் அந்த மாத இறுதியில், ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் கடத்தப்பட்ட பேராசிரியர்களை மீட்கும் முயற்சியில் தோல்வியடைந்ததாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் (பெண்டகன்) தெரிவித்தது.

கடந்த 1 ஆம் தேதி எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்தக் காணொளியில், கடத்தப்பட்டவர்கள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிடம், அவர்கள் விடுதலை செய்யப்பட சிறை கைதிகள் பறிமாற்றம் ஒன்றிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண ;பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்