வட சைப்ரஸிலிருந்து துருக்கி தனது படைகளை விலக்காது : அதிபர் எர்துவான் கருத்து

  • 13 ஜனவரி 2017

சைப்ரஸ் தீவை மீண்டும் ஒன்றிணைக்கும் சாத்தியக்கூறான எந்த ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும், கிரீஸ் தனது படைகள் அனைத்தையும் அத்தீவிலிருந்து விலக்கிக்கொள்ளாதவரை, துருக்கி தனது படைகளை வட சைப்ரஸிலிருந்து விலக்காது என்று துருக்கிய அதிபர் ரெஜிப் தயிப் எர்துவான் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption துருக்கிய அதிபர் ரெஜிப் தயிப் எர்துவான்

ஆனால், சைப்ரஸ் தீவில் துருக்கி எப்போதும் இருக்கும் என்றும், எந்த ஒப்பந்தம் வந்தாலும் அதற்கு உத்தரவாதம் கொடுப்பவராக துருக்கி இருக்கும் என்றும் இஸ்தான்புல்லில் செய்தியாளர்களிடம் பேசிய எர்துவான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு ஒப்பந்தத்திற்கு வருவதற்கான நம்பிக்கையை பேச்சுவார்த்தைகள் ஏற்படுத்தி இருப்பதாகவும், ஆனால் தீவிலிருந்து துருக்கிய படைகள் வெளியேற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் கிரேக்க சைபிரஸின் தலைவர் நிகோஸ் அனாஸ்டஸியாடஸ்.

மத்தியஸ்தர்கள் அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர உள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்