ஐரோப்பா : கடும் குளிரில் குடியேறிகள் தவித்து வருவதாக ஐ.நா கவலை

குடியேறிகளுக்கு சில நாடுகள் ஆதரவு தாராததால், ஐரோப்பாவில் உள்ள குடியேறிகள் கடும் குளிரில் மிக பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருவதாக, ஐநாவின் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐரோப்பாவில் உள்ள குடியேறிகள் கடும் குளிரில் தவித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

கிரேக்க தீவுகளில் பல வெப்பமடையாத கட்டிடங்களில் பலர் தங்கியுள்ளனர் என்றும், பல்கேரியாவில், குளிர் மற்றும் சோர்வு காரணமாக பல குடியேறிகள் இறந்துள்ளனர் என ஐநாவின் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவுக்கு இட்டுச் செல்லும் பால்கன் பாதையில் உள்ள நாடுகள், குடியேறிகளை வரவிடாமல் தொடர்ந்து தடுப்பதாகவும் , காவல் துறையினர் தங்கள் மீது வன்முறையை பிரயோகம் செய்ததாக சில குடியேறிகள் கூறியதாகவும் ஐநாவின் அகதிகள் முகமை கூறியுள்ளது.

இதற்கிடையில், சுமார் 26,000 பெற்றோருடன் அல்லது வயது வந்தவர்களுடன் வராத குழந்தைகள், கடந்த ஆண்டு மத்திய தரைக்கடலை கடந்து இத்தாலிக்கு வந்துள்ளதாக ஐநாவின் குழந்தைகளுக்காக முகமை தெரிவித்துள்ளது. 2015யை காட்டிலும், இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமானது ஆகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்