ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையில் முதல்முறையாக பனிச்சறுக்கு ஹாக்கி போட்டி

  • 14 ஜனவரி 2017

முதல்முறையாக பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டு போட்டி ஒன்று ரஷ்ய மற்றும் சீனாவுக்கு இடைப்பட்ட எல்லையாக உறைந்த ஆற்றில் நடத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டு (கோப்புப்படம்)

70 சென்டி மீட்டர் கனத்தில் பனி அடர்த்தியாக படர்ந்திருந்த ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த ஹாக்கி சறுக்காட்ட ஆடுகளம், கிழக்கு பகுதியில் தொலைதூரத்தில் ரஷ்யாவின் முக்கிய மாகாண நகரான பிளகவேஷ்சென்ஸ்கிற்கு வெளியே அமைந்திருக்கும் அமுர் நதியில் உருவாக்கப்பட்டிருந்தது.

அமுர் பிராந்தியத்தை பிரிதிநிதித்துவம் செய்த மிக வலிமையான ரஷ்ய அணி முதலில் 4-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால், ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து கிடைத்த பலத்த ஊக்கமூட்டுதலால் சீன அணி 3 கோல்களை போட்டு வெற்றிக்கு மிகவும் நெருங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்