பஹ்ரைன்: 3 ஷியா செயற்பாட்டாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

2014ஆம் ஆண்டு நடைபெற்றதொரு குண்டு தாக்குதலில் 3 காவல்துறையினரை கொலை செய்தது தொடர்பாக 3 ஷியா செயற்பாட்டாளர்களுக்கு பஹ்ரைன் அதிகாரிகள் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த தண்டனையை ஒரு வாரத்திற்கு முன்னால் நாட்டின் உயர்நிலை நீதிமன்றம் உறுதி செய்தது.

ஷியா எதிர் குழுவான அல்-விஃபாக்கை கலைத்துவிட பஹ்ரைன் நீதிமன்றம் உத்தரவு

இந்த குற்றவாளிகளிகளை துப்பாக்கியால் சுட்டு, மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு அதிகரிகள் தயாராகி வருகின்ற தகவல் சமூக ஊடகங்களில் வெளிவந்தபோது, சனிக்கிழமை நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

படத்தின் காப்புரிமை AP

இந்த போராட்டங்களில் காவல்துறையினர் ஒருவர் சுடப்பட்டு, காயமடைந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

பஹ்ரைன்: வலைதளத்தில் பகிர்ந்த கருத்து, நபீல் ரஜாபிடம் வழக்கு விசாரணை

2011-ஆம் ஆண்டு பஹ்ரைனை ஆளும் சுன்னி சிறுபான்மை இனத்திற்கு எதிராக பெரும்பான்மையாக வாழும் ஷியா இனமக்கள் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

மேலும் படிக்க:

மரண தண்டனையும் அதன் சிக்கல்களும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்