மெர்கலின் கட்சியிலிருந்து வெளியேறுகிறார் மூத்த அரசியல்வாதி

குடியேற்றம் தொடர்பான கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சான்சலர் ஏங்கெலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியை விட்டு மூத்த ஜெர்மானிய அரசியல்வாதி விலகியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption குடியேறிகளுக்கு எதிரான கொள்கையுடைய ஆல்டர்நேட்டீவ் ஃபர் டோய்ச்லான்ட் கட்சியில் சேரப்போவதில்லை - எரிகா ஸ்டென்பாக்

ஜெர்மனியின் அடைக்கல சட்டங்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பு பலவீனம் அடைந்த போதும் அதே செயல்பாட்டில் நிலையாக இருந்ததாகவும், சர்ச்சைக்குரிய அறிக்கைகள் பலவற்றை வெளியிடுபவர் என்று அறியப்படுபவரும், மனித உரிமைகள் பற்றிய ஜனநாயக கட்சியின் பெண் செய்தி தொடர்பாளருமான எரிகா ஸ்டென்பாக் கூறியிருக்கிறார்.

தனியாக அல்ல சர்வதேச ஒத்துழைப்போடு செயல்படுவதே சிறப்பு - மெர்கல்

குடியேறிகளுக்கு எதிரான கொள்கையுடைய ஆல்டர்நேட்டீவ் ஃபர் டோய்ச்லான்ட் கட்சியில் சேரப்போவதில்லை என்று தெரிவித்திருக்கும் எரிகா ஸ்டென்பாக், இந்த ஆண்டு நடைபெறயிருக்கும் புண்டெஸ்டாக் எனப்படும் ஜெர்மனி நாடாளுமன்ற கீழவை தேர்தலில் அந்த கட்சி அதிக இருக்கைகளை வெல்லும் என்று தெரிவித்திருக்கிறார்.

பெர்லின் தாக்குதல் எதிரொளி; ஜெர்மன் பாதுகாப்பு குறித்து சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கருத்து

இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலின் போது, நாட்டின் முன்னிலை பிரச்சனைகளில் ஒன்றாக குடியேற்ற பிரச்சனை நிச்சயமாக இ.ருக்கும் என்று தெரிய வருகிறது.

மேலும் வாசிக்க:

பெர்லின் தேர்தல் தோல்விக்கு மெர்கல் பொறுப்பேற்பு

கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் சாத்தியமானது எப்படி? ஜெர்மன் அரசு தீவிர விசாரணை

ஜெர்மனி: சான்சலர் பதவிக்கு நான்காவது முறையாக போட்டியிடும் மெர்கல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்