ஆப்ரிக்காவின் சிறந்த படங்கள் (புகைப்படத் தொகுப்பு)

  • 15 ஜனவரி 2017

2017 ஜனவரி 7 முதல் 13 ஆம் தேதி வரை ஆப்ரிக்கா முழுவதிலும் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்கள்:

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சனிக்கிழமையன்று, கானாவின் தலைநகரான அக்ராவில் நடைபெற்ற புதிய அதிபரான நானா அக்குஃபோ அடோவின் பதவியேற்வு விழாவின் போது, கன்னத்தில் பல வண்ணங்களில் எழுதி, புதிய அதிபருக்கு தன்னுடைய ஆதரவு தெரிவிக்கும் இளைஞர்...
படத்தின் காப்புரிமை Reuters
Image caption அதே நிகழ்ச்சியில், முரசில் தாளமிட்டு முழக்கம் எழுப்பும் இசைக்கலைஞர், அதிபரின் விருந்தினரை மகிழ்விக்கும் காட்சி...
படத்தின் காப்புரிமை EPA
Image caption இந்த இசைக்கொம்பு கலைஞர்கள் புதிய அதிபருக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் தங்களுடைய இசைக்கொம்பை ஊதுகின்றனர்.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption அன்றைய நாள் கானாவுக்கு அடுத்து அமைந்துள்ள ஐவரி கோஸ்ட், அதனுடைய இரண்டாவது பெரிய நகரமான பௌவகேயின் தெருக்களில் மேலதிக சலுகைகளை கோரிய சிப்பாய்களின் கிளர்ச்சியால் ஸ்தம்பித்தது.
படத்தின் காப்புரிமை AFP
Image caption சிப்பாய்களின் கிளர்ச்சி பற்றி செய்தி பௌவகேயின் போக்குவரத்தை வெகுவாக பாதித்தது. அப்போது தங்கள் விரும்பம்போல் நேரத்தை கழிக்க இந்த பயணிகளால் முடிந்தது.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஞாயிற்றுக்கிழமையன்று, சிக்போக் பள்ளியில் இருந்து 200-க்கு மேலான மாணவியர் கடத்தப்பட்டு 1000-மாவது நாளை குறிக்கும் வகையில் "பிரிங் பேக் அவர் கேள்ஸ்" என்ற அமைப்பின் உறுப்பினர்கள் நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் பேரணி நடத்தினர்.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption பின்னர், அவர்களின் இந்த பேரணியை கலவர தடுப்பு போலிஸார் தடியடி நடத்தி கலைத்ததால், இந்த செயற்பாட்டாளர்களின் பேரணி சுமூகமாக நடைபெறவில்லை.
படத்தின் காப்புரிமை AFP
Image caption புதன்கிழமையன்று, கென்யாவின் மொம்பாசா துறைமுகத்தில் பயணியர் மற்றும் சரக்கு ரயில் சேவையின் தொடக்கத்தின் போது காவலில் பாதுகாப்பு பணியாளர்.
படத்தின் காப்புரிமை AFP
Image caption புதன்கிழமையன்று, தலைநகர் ஜூபாவில் பயிற்சி எடுக்கின்ற தெற்கு சூடான் சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்.
படத்தின் காப்புரிமை AFP
Image caption எல்லை கடந்து வர்த்தகம் மேற்கொள்வதற்கு தடைவிதித்திருப்பதால் கோபம் அடைந்துள்ள பகுதியான லிபியாவின் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு நகரின் காவல் நிலையத்தின் மீது கற்களை எறிகின்ற துனிஷிய இளைஞர்கள்.
படத்தின் காப்புரிமை AFP
Image caption செவ்வாய்கிழமையன்று கொலையுண்ட புரூண்டி நீர்வள அமைச்சர் இம்மானுவேல் நியான்குருவின் மகள், தன்னுடைய தந்தையின் கல்லறையை புஜூம்புராவில் நடைபெற்ற இறுதிச்சடங்கின்போது ஆசீர்வதிக்கிறார்.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption புதன்கிழமையன்று, அல்ஜீரஸில் நடைபெற்ற "வின்டர் சூப்" என்ற வீடில்லாத மக்களுக்கு உணவு வழங்கும் அறக்கொடை நிகழ்வின்போது, வீடில்லாத சிறுமி சாப்பிடுவதை பார்த்த அல்ஜீரிய காவல்துறை அதிகாரி ஒருவர் முழந்தாழ் படியிடுகிறார்.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption திங்கள்கிழமையன்று, தாங்கள் தஞ்சம் அடைந்துள்ள வீட்டிற்கு முன்னால் நைஜீரியாவின் தெற்கு காதுனாவில் நடைபெறும் சண்டையால் இடம்பெயர்ந்துள்ள குழந்தைகள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்

பிபிசியைச் சுற்றி