கிர்கிஸ்தானில் விமானம் வீழ்ந்தது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிர்கிஸ்தானில் விமானம் வீழ்ந்தது

  • 16 ஜனவரி 2017

கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கெக்குக்கு அருகே மக்கள் வாழ்விடம் ஒன்றின் மீது சரக்கு விமானம் ஒன்று வீழ்ந்ததில் குறைந்தபட்சமாக முப்பத்தியேழு பேராவது கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த துருக்கிய சரக்கு விமானம் ஹாங்காங்கில் இருந்து கிர்கிஸ்தானுக்கு வந்துள்ளது.

விமானம் வீழ்ந்ததில், பதினைந்து வீடுகள் வரை நிர்மூலமானதுடன், பல கார்கள் நசுங்கிப் போயின.

விமானம் வீழ்ந்தபோது பலர் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்தார்கள். விமானியின் தவறு இது என ஒரு அறிக்கை கூறுகின்றது. பனிமூட்டம் காரணமாக அங்கு சூழலில் பார்ப்பதற்கான திறனும் குறைவாகவே இருந்துள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.