ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையே சிறந்த பாதுகாப்பு : டிரம்புக்கு ஏங்கெலா மெர்கல் பதிலடி

டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துக்களுக்கு எதிரான சிறந்த தற்காப்பு என்பது ஐரோப்பிய ஒற்றுமைதான் என்று ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையே சிறந்த பாதுகாப்பு : ஏங்கெலா மெர்கல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியது குறித்து புகழ்ந்து பேசிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.

ஐரோப்பா தனது சுய அடையாளத்திற்காகவும், 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான கொள்கைகளுக்காகவும் போராட வேண்டும் என்று மெர்கல் கூறியுள்ளார்.

ஒரு மில்லியனுக்கு அதிகமான குடியேறிகளை ஜெர்மனிக்குள் நுழைய அனுமதித்தது பேரழிவு ஏற்படுத்தும் தவறு என்று கூறிய டிரம்பின் கருத்துக்கு ஜெர்மன் துணை சான்சலரான சிக்மர் கேப்ரியல், கடுமையான பதிலுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கர்களின் நடவடிக்கையானது குடியேறிகள் நெருக்கடியை ஏற்படுத்தியதாக கேப்ரியல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

செய்திகளை முகநூலில் படிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்