காம்பியாவில் 3 அமைச்சர்கள் விலகல், அதிபர் பதவி விலக அழுத்தங்கள் அதிகரிப்பு

  • 17 ஜனவரி 2017

அதிபர் யாக்யா ஜாமே பதவியில் இருந்து இறங்குவதற்கான அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், காம்பியாவின் வெளியுறவு அமைச்சர் நினே மேக்டவ்ல்-கயா உள்பட குறைந்தது 3 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் அடாமா பாரோ கண்டிப்பாக வியாழக்கிழமை பதவியேற்க வேண்டும் என்பதை மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மாலியில் ஆப்ரிக்க நாடுகளின் உச்சி மாநாடு, காம்பியா அரசியல் நெருக்கடி பற்றி விவாதம்

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தை கைப்பற்றிய ஜாமேயை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தேவைப்பட்டால், ராணுவத்தை பயன்படுத்தவும் தயாராக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

காம்பியா உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பற்றாக்குறை

அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்ததை தொடக்கத்தில் ஏற்றுகொண்ட ஜாமே, பின்னர் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டார்.

மேலும் வாசிக்க:

தேர்தலில் தோற்ற அதிபரை சமரசம் செய்ய மேற்கு ஆஃப்ரிக்க தலைவர்கள் காம்பியா பயணம்

காம்பியா: தேர்தல் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிபர் தரப்பில் முறையீடு

தெய்வத்தின் உதவியுடன் தேர்தலில் வெல்வேன் – காம்பியா அதிபர்

காம்பியா அதிபர் தேர்தலில் 22 ஆண்டுகளாக ஆட்சி செய்த யாக்யா ஜமே தோல்வி; மக்கள் கொண்டாட்டம்

காம்பியாவின் அரசியல் நெருக்கடிக்கு முக்கிய தீர்மானம் - மேற்கு ஆப்ரிக்க தலைவர்கள்

காம்பியாவின் மனித உரிமைகள் நிலை மேம்பட அம்னெஸ்டி இண்டர்னேஷனல் கோரிக்கை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்