சோமாலியாவில் கடும் வறட்சி, ஆபத்தில் 4 மில்லியன் மக்களின் வாழ்க்கை

  • 17 ஜனவரி 2017

சோமாலியாவில் நிலவி வருகின்ற மிகவும் மோசமான வறட்சியால் சுமார் 4 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஆபத்திற்கு உள்ளாகி இருப்பதாக ஐநா மனிதநேய அமைப்பு தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை MOHAMED ABDIWAHAB/AFP/Getty Images

இந்த பிரச்சனையை சமாளிக்க 850 மில்லியன் டாலர்களுக்கு மேலாக தேவைப்படுவதாக மனிதநேய விவகார பணிகளின் அலுவலகம் முறையிட்டுள்ளது.

அடுத்தடுத்து பருவமழை அங்கு பொய்த்து போனதாலும், சில சமூகங்கள் இடம்பெயரவும், சேவைகள் வழங்குவதை பாதிக்கவும் செய்த மோதல்களாலும் அங்கு மனிதநேய சூழ்நிலை மோசமாகியுள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நிலவிய பஞ்சத்தால் சோமாலியாவில் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் இறந்தனர்.

ஆரம்ப கட்டத்திலேயே நடவடிக்கை எடுப்பதே இன்னொரு பேரழிவை முறியடிக்கவும் , படிப்பினைகள் பெறப்பட்டுவிட்டன என்பதைக் காட்டவும் உள்ள ஒரே வழி என்று சோமாலியாவுக்கான ஐநா உதவியின் சிறப்பு பிரதிநிதி பெய்றர் டி கிளேர்க் தெரிவித்திருக்கறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்