ட்ரம்ப் வருகையும்  மெக்ஸிக்கோ மக்களும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ட்ரம்ப் வருகையும் மெக்ஸிக்கோ மக்களும்

  • 18 ஜனவரி 2017

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்,  அமெரிக்காவிலிருக்கும் மெக்ஸிக்கர்களால் அவர்களது குடும்பங்களுக்கு அனுப்பப்படும் பணத்தையும் தடுக்கப் போவதாக உறுதியளித்துள்ளார்.

மெக்ஸிக்கோவிலுள்ள லட்ச கணக்கான மக்கள் அமெரிக்காவிலுள்ள உறவினர்கள் அனுப்பி வைக்கும் பணத்தை நம்பியே வாழ்கிறார்கள்.

அது நாட்டின் எண்ணெய்  ஏற்றுமதி வருவாயை விட பெரியதாகும்.

ட்ரம்பின் இந்த அறிவிப்பு மட்டுமல்லாமல், மெக்ஸிக்கோ தொடர்பில் அவர் வெளியிட்டுவரும் கருத்துக்கள் அந்நாட்டு பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதிலிருந்து மெக்ஷிக்கோவின் நாணய மதிப்பு இருபது வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறர்கள்.