பாரோவுக்கு ஆதரவாக காம்பியாவில் செனகோல் படைப்பிரிவுகள்

  • 20 ஜனவரி 2017

கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த அடாமா பாரோவுக்கு ஆதரவாக செனகோல் படைப்பிரிவுகள் காம்பியாவில் நுழைந்துள்ளன.

செனகோல் தலைநகர் டகாரில் அமைந்துள்ள காம்பிய தூதரக அலுவலகத்தில் பாரோ அதிபராக பதவியேற்றார். சர்வதேச அளவில் அடாமா பாரோ காம்பியாவின் சட்டப்பூர்வ அதிபராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் பிராந்திய அமைப்பான மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம், யாக்யா ஜாமே வெள்ளிக்கிழமை மதியத்திற்குள் அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று காலக்கெடு விதித்திருக்கிறது.

இல்லாவிட்டால், ஜாமே ஆயுதப்படையின் உதவியுடன் நீக்கப்படுவார் என்று அது எச்சரித்திருக்கிறது.

இந்த பிரச்சனையில் முதலில், அரசியல் தீர்வுக்கு முயல வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் அதேவேளையில், 15 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பவை இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜாமே ஆயுதப்படையின் உதவியுடன் நீக்கப்படுவார் என ஆப்ரிக்க நாடுகளின் பொருளாதார சமூக அமைப்பு தெரிவித்திருக்கிறது

ஜாமே அதிபர் நிலையிலிருந்து விலக மறுப்பது காம்பிய நாடாளுமன்றத்தால் ஆதரிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை வரையான காலகெடுவின்போது புதிய மத்தியஸ்தத்தோடு நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகள் கினியின் அதிபர் அல்ஃபா கான்டியால் நடத்தப்படுகின்றன.

வியாழக்கிழமை மாலை வரை இருந்த காலகெடுவுக்குள் ஜாமேக்கும் மொரிஷியஸ் அதிபர் அவுட் அப்துல் அசிஸ்-க்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்ற பிறகு, இந்த புதிய மத்தியஸ்தத்தோடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தற்போது செனகோலில் இருக்கின்ற பாரோ ராணுவ நடவடிக்கைள் முடிவுக்கு வரும்வரை தான் காம்பியாவின் தலைநகர் பான்ஜூலுக்கு செல்லப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ராணுவ நடவடிக்கை மூலம் தாக்குவதற்கு தயாராக இருப்பதை காட்டி எச்சரிக்கை விடுக்கும் வகையில், நைஜீரியா உளவு பார்க்கும் விமானத்தை காம்பியா மேலே வியாழக்கிழமை பறக்கவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சிறந்த ஆயுதப் பயிற்சி பெற்ற படைப்பரிவாக செனகோல் படை கருதப்படுகிறது

அழகான கடற்கரைகளால் விடுமுறையை சிறப்பாக கழிக்க விரும்புகின்ற ஐரோப்பியர்களுக்கு பிரபல சுற்றுலா இடமாக இருக்கின்ற சிறியதொரு நாடான காம்பியா அரசியலில், சில வாரங்களாக ஸ்திரமற்ற நிலை நிலவி வருகிறது.

ஆயிரக்கணக்கான காம்பிய மக்கள் செனகோலில் அடைக்கலம் புகுந்திருக்கும் நிலையில், தங்களுடைய சுற்றுலாவை பாதியில் நிறுத்திவிட்டு சுற்றுலா பயணியர் தாயகம் திரும்பியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்