காம்பியா: யாக்யா ஜாமே பதவி இறங்க சம்மதித்து அமைதி ஒப்பந்தம்

காம்பியாவில் நீண்டகாலமாக அதிபராக இருக்கின்ற யாக்யா ஜாமே பதவியில் இருந்த விலக சம்மதித்து எட்டப்பட்டுள்ள ஒப்பந்தம், வன்முறைக்கு எதிராக அமைதிக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்று மௌரிடானியா அதிபர் முகமது ஒவுட் அப்துல் அசிஸ் புகழ்ந்துள்ளார்.

யாக்யா ஜாமே

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

காம்பியர்களின் வாழ்க்கையை பாதுகாக்க பதவியில் இருந்து இறங்க ஒப்பு கொண்டிருப்பதாக அரசு தொலைக்காட்சியில் ஜாமே தெரிவித்தார்

படைப்பிரிவுகள் போரிட தயாராக இருப்பதாக விடுத்த மிரட்டலின் பின்புலத்தோடு, தோல்வியடைந்த அதிபரை அவருடைய பதவியில் இருந்து விலக கட்டாயப்படுத்திய மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்களில் ஒருவராக இந்த மௌரிடானியா நாட்டின் அதிபரும் இருந்தார்.

காம்பியர்களின் வாழ்க்கையை பாதுகாக்க தன்னுடைய பதவியை கைவிட ஒப்பு கொண்டிருப்பதாக அரசு தொலைக்காட்சியில் ஜாமே முன்னதாக தெரிவித்தார்.

பட மூலாதாரம், Reuters

அவர் நாடு கடந்து செல்வதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஜாமே செய்துள்ள குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனறு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

ஜாமே அவருடைய 22 ஆண்டுகால ஆட்சியின்போது, தன்னுடைய அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்தார், சித்ரவதை செய்தார், கொலை செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்