டிரம்பை முதலில் சந்திக்கும் உலக தலைவர்களில் ஒருவராக தெரீசா மே

  • 22 ஜனவரி 2017

அடுத்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்பை முதலில் சந்திக்கும் சில உலக தலைவர்களில் ஒருவராக சந்திக்கிறபோது, பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் சிறப்புமிக்க உறவு என்று அவர் கூறுகின்ற ஒரு உறவை உருவாக்குவது பற்றி கலந்துரையாட போவதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை PA

சாத்தியமாகும் ஒரு வர்த்தக ஒப்பந்தம், நேட்டோ, தீவிரவாதம் ஆகிய அம்சங்கள் பற்றி தெரீசா மே டிரம்புடன் கலந்துரையாடுவதை எதிர்பார்ப்பதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளும் பொதுவான சவால்களை எதிர்கொள்கின்றன ,அச்சுறுத்தல்களை கண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் பற்றி டொனால்ட் டிரம்பின் முந்தைய கருத்துக்களை பற்றி கேட்டபோது, ஏற்றுக்கொள்ள முடியாததாக ஏதையாவது கண்டறிந்தால், அது பற்றி டிரம்பிடம் கூறுவதற்கு அஞ்சப்போவதில்லை என்று தெரீசா மே தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்