சிரியா அரசு - போராளிகள் இடையே 2-ஆம் நாள் பேச்சுவார்த்தை பலன் தருமா?

  • 24 ஜனவரி 2017

சிரியா அரசுக்கும், போராளிக் குழுக்களுக்கும் இடையே கஜகஸ்தானில் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தை இரண்டாம் நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கவுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

இரு தரப்பினரும் ஒருவர் மீதொருவர் கடுமையான சாடல்களை பகிர்ந்து கொண்டதால், நேற்றைய பேச்சுவார்த்தை கோபாவேசம் மிகுந்ததாக அமைந்தது.

சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் அரசை ஒரு பயங்கரவாத அமைப்பு என அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான முகமது அலூஷ் விவரித்துள்ளார்.

அவரது இந்த கடுமையான கருத்தை, ஒரு இழிவான மற்றும் ஆத்திரமூட்டும் விமர்சனம் என்று சிரியா அரசு தனது பதில் கண்டனத்தை தெரிவித்தது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அரசை பயங்கரவாத அமைப்பு என விவரித்த முகமது அலூஷ்

ரஷ்யா, துருக்கி மற்றும் இரான் ஆகிய நாடுகள் ஏற்பாடு செய்துள்ள இந்த அமைதி பேச்சுவார்த்தையில்தான், முதல் முறையாக இரு தரப்பில் யாரும் வெளியேறாமல் போராளிகளின் தளபதிகளும், சிரியா அரசாங்கத்தின் தூதுக்குழுவும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்