பிடி இத்தாலி நிறுவனத்தில் சுமார் 700 மில்லியன் டாலர் கணக்கு மோசடி

பிரிட்டிஷ் தொலைத்தொடர்பு நிறுவனமான பிடியில் நடைபெற்ற கணக்கு மோசடி தொடர்பாக அந்நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவு தலைவர் கோராடோ சையோலா பதவி விலகுவதாக பிபிசி அறிய வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Google

பிடி இத்தாலி நிறுவனத்தின் கணக்கில் நிகழ்ந்த சுமார் 700 மில்லியன் டாலர் மோசடியால் தன்னுடைய வேலையை இழக்கும் மூத்த தலைமை செயலதிகாரி சையோலா. .

இந்த நிறுவனத்தை பற்றி பக்கசார்பற்றமுறையில் நடைபெற்ற ஒரு ஆய்வில், பல ஆண்டுகளாக அதனுடைய வருவாய் அதிகரித்து காட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது,

முன்னதாக பிடி நிறுவனம் தன்னுடைய வர்த்தக மதிப்பீட்டை மூன்று காலாண்டுகளுக்கு ஒரு பில்லியன் டாலர் குறைத்ததை தொடர்ந்து அதனுடைய பங்குகள் 19 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன.

இந்த இத்தாலி நிறுவனத்தின் மூத்த மேலாண்மை அணியில் பலர் ஏற்கெனவே இந்நிறுவனத்தை விட்டு சென்று விட்டனர்.

அடுத்த மாதம் பிடி இத்தாலி நிறுவனத்திற்கு புதிய தலைமை செயலதிகாரி நியமிக்கப்படவுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்