ஆக்கிரமித்த மேற்கு கரையில் 2,500 புதிய வீடுகளை கட்டும் இஸ்ரேல்

  • 24 ஜனவரி 2017

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் புதிதாக 2,500 வீடுகளைக் கட்டுகின்ற திட்டத்திற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP

தானும், பிரதமர் பென்யமீன் நெத்தன்யாஹூவும் இந்த திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் அவிக்டோர் லியேபிர்மன் கூறிருக்கிறார்.

மேற்கு கரையிலுள்ள பெரிய குடியிருப்பு தொகுதிகள் அமைந்திருக்கும் இடத்திற்குள், இந்த புதிய வீடுகளில் பெரும்பாலானவை கட்டப்பட இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நான்கு நாட்களுக்கு பிறகு இந்த தீர்மானம் வந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் 566 வீடுகளின் கட்டுமானத்திற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்