உறைபனிக் குளிரில் தரையில் படுத்துறங்கும் சிறார் குடியேறிகள்

உறைபனிக் குளிரில் தரையில் படுத்துறங்கும் சிறார் குடியேறிகள்

செர்பிய தலைநகர் பெல்கிரேடில் கடும் குளிரில் தரையில் படுத்துறங்கும் ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகளில் எட்டு வயதான சிறார்களும் அடங்குகின்றனர்.

தமது உறவினர் துணையில்லாமல் குடியேறிகளாக வந்தவர்கள் இந்த சிறார்களில் சிலர்.

உறை பனி காலநிலையில், ஒரு ரயில் பாதையின் இரு புறமாகவும், கைவிடப்பட்ட ஒரு களஞ்சியத்திலும் அவர்கள் உறங்குகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக இல்லாத செர்பியாவில் தங்கியிருக்க பெரும்பாலான குடியேறிகளுக்கு விருப்பமில்லை.

அவர்களின் நிலை குறித்த பிபிசியின் காணொளி.