ஆதரவற்ற சிரியா நாட்டவரை அகதிகளாக எடுக்க இஸ்ரேல் திட்டம்

  • 26 ஜனவரி 2017

இஸ்ரேல் நாடு சுமார் நூறு ஆதரவற்ற சிரியா நாட்டவரை அகதிகளாக எடுத்துக் கொள்ளும் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

சிரியா உள்நாட்டு மோதலிலிருந்து வரும் அகதிகளை ஏற்று கொள்வது என்பது இஸ்ரேலுக்கு இதுவே முதல்முறை.

தொடக்கத்தில் அந்த ஆதரவற்ற சிரியர்கள் உறைவிட பள்ளிகளில் தங்கவைக்கப்படுவார்கள் என்றும், ஆனால் பிற்பாடு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அரபு இஸ்ரேலிய குடும்பங்களில் அவர்கள் தத்தெடுத்து கொள்ளப்படுவார்கள் என்று இஸ்ரேலிய தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.

இன்னும் இஸ்ரேலும், சிரியாவும் எழுத்தளவில் பார்த்தால், போர் நிலையில்தான் உள்ளன.

ஆனால், சிரியா உள்நாட்டு போரில் காயம் அடைந்த ஆயிரக்கணக்கான சிரியர்களுக்கு இஸ்ரேல் மருத்துவ சிகிச்சைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்