சட்டபூர்வமற்ற குடியேறிகளை அகற்ற மத்திய நிதி ஆதரவை கருவியாக்கும் டிரம்ப்

அமெரிக்க மத்திய குடியேற்ற துறை அதிகாரிகளோடு ஒத்துழைக்க வேண்டுமென்று அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த மையாமி-டேட் வட்டார மேயர் கார்லோஸ் ஜிமென்ஸ் சிறை அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குடியேற்ற துறை அதிகாரிகளோடு ஒத்துழைப்பது என்பது மியாமியின் அதிகாரிகள் அதிக மக்களை கைது செய்ய போகிறார்கள் என்று பொருள்படாது

சட்டபூர்வமற்ற குடியேறிகளுக்கு புகலிடமாக செயல்படுகின்ற நகரங்களுக்கு வழங்குகின்ற மத்திய நிதி ஆதரவை நீக்கிவிடுகின்ற செயலாணையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட ஒரு நாளைக்கு பின்னர் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

மத்திய அரசின் நிதியிலிருந்து கிடைக்கின்ற மில்லியன் கணக்கான டாலர்களை இழக்கின்ற ஆபத்தை விரும்பவில்லை என்று மேயர் கார்லோஸ் ஜிமென்ஸ் தெரிவித்திருக்கிறார்.

குடியேறிகள் பிரச்சனையால் அரசு நிதி வெட்டு அறிவிப்பு : 'அச்சமில்லை' என தெரிவித்த அமெரிக்க நகர மேயர்கள்

ஆனால், இதனால் மியாமியின் அதிகாரிகள் அதிக மக்களை கைது செய்ய போகிறார்கள் என்று பொருள்படாது என்று அவர் கூறியுள்ளார்.

நியூ யார்க் மற்றும் சான் பிரான்ஸிஸ்கோ உள்பட பல நகரங்கள் இந்த ஆணையை எதிர்க்க போவதாக தெரிவித்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்