படைவீரர்கள் விவகாரம்: கிரீஸ் நாட்டை அச்சுறுத்தும் துருக்கி

கிரீஸ் நாட்டுக்கு கடல் கடந்து வரும் குடியேறிகளை திரும்ப தங்களது நாட்டிற்குள் அனுமதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக துருக்கி அச்சுறுத்தியுள்ளது.

துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை அடுத்து கைது செய்யப்பட்ட ராணுவ படையினர்.

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு ஜூலை மாதம், துருக்கியில் தோல்வியில் முடிந்த ராணுவ அதிரடிப்புரட்சிக்குப் பின்னர், கிரீஸ் நாட்டிற்கு தப்பியோடிய எட்டு படையினர் கொண்ட ஒரு குழுவை, ஒப்படைக்க மறுத்துள்ள கிரேக்க நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் முடிவு துருக்கி நாட்டை கோபமூட்டியுள்ளது.

அந்த படையினர் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

துருக்கி வெளியுறவு துறை அமைச்சர் மெவ்லூத் சாவ்வுஸ்லாவு தனது நாடு தேவையான எல்லா முயற்சிகளையும் எடுக்கும் என்றும் வழக்கை மீண்டும் நடத்தவும் கோரினார்.

அவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு அரசியல் முடிவு என்று தெரிவித்தார்.

குடியேறிகள் தொடர்பான ஒப்பந்தம் நிலைத்திருக்கும் என்று நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.