வெள்ளை மாளிகைக்கு வர பிரிட்டன் பிரதமர் தெரீசா மேவை அழைத்துள்ள டிரம்ப்

அமெரிக்காவில் இன்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் போது, முதல் முறையாக வெள்ளை மாளிகைக்கு ஒரு வெளிநாட்டுத் தலைவரை டிரம்ப் வரவேற்க உள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு அமெரிக்காவுடனான புதிய ஒப்பந்தத்துக்கான சாத்தியம் குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு அமெரிக்காவுடனான புதிய ஒப்பந்தத்துக்கான சாத்தியம் குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நேடோவின் எதிர்காலம் உள்பட பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்தும் பேசுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றிற்கு பொது ஆதரவு தெரிவித்துள்ள போதும், தன்னுடைய உள்ளுணர்வு காரணமாக அவர் ஒரு பாதுகாப்புவாதி என்று கூறும் வாஷிங்டனில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர், அமெரிக்காவை காட்டிலும் பிரிட்டனுக்கு இந்த ஒப்பந்தம் அதிக தேவை என்பதை டிரம்ப் நன்கு அறிவார் என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்