ஃபோக்ஸ்வேகன் கார்களின் மாசு வெளிப்பாடு முறைகேட்டில் விரிவான விசாரணை

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீசல் கார்களின் மாசு வெளிப்பாடு முறைகேட்டில் தமது விசாரணையை ஜெர்மனியில் உள்ள அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் விரிவுப்படுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான மார்டின் வின்டெர்கோர்ன் மாசு சோதனைகளை ஏமாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் குறித்து தான் முன்னரே கூறியிருந்த நிலையில், அதற்குமுன்பே இதுகுறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதற்கான முக்கிய ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை மார்டின் மறுத்துள்ளார்.

வின்டெர்கோர்ன் உள்பட மற்றவர்களும் சாத்தியமான மோசடிகள் செய்திருப்பதற்காக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், 16 சந்தேக நபர்கள் இந்த விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணை தொடர்பில் தனியார் முகவரிகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்