ஆஸ்திரேலிய ஓபனில் செரீனா சாதனை படைப்பாரா?

அமெரிக்க டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தன்னுடைய வரலாற்று சாதனையான இருபத்தி மூன்றாவது கிரான்ட்ஸ்லாம் போட்டியை இன்று வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image caption 2003 ஆம் ஆண்டு விம்பிள்டன் போட்டியில் வீனஸை தோற்கடித்த செரீனா

டென்னிஸ் நட்சத்திரம் ஸ்டெபி கிராஃப் படைத்த சாதனை பதிவை முறியடித்து இந்த வரலாற்று சாதனை படைப்பதற்கு, தன்னுடைய மூத்த சகோதரியான வீனஸை, இன்று நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் செரீனா வெல்ல வேண்டும்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள்

செரீனா தன்னுடைய முதலாவது கிரான்ட்ஸ்லாம் போட்டியின் வெற்றியை 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தான் தொடங்கினார்.

எனவே, இன்று செரீனா வெற்றிபெற்றால், அவர் முதல் கிரான்ட்ஸ்லாம் வென்றதும், வரலாற்று பதிவை சொந்தமாக்கியதும் ஆஸ்திரேலியாவாக விளங்கும்.

தங்கப் பதக்கத்தை இழக்கிறார் உசைன் போல்ட்

நீண்டகாலமாக விளையாடி வருகின்ற டென்னிஸ் தொழில்முறை விளையாட்டு போட்டிகளில், இந்த வில்லியம்ஸ் சகோதரிகள் 8 கிரான்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிகள் உள்பட 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

கெளரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்த ராகுல் டிராவிட்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்