அகதிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் : ஐ.நா வேண்டுகோள்

அமெரிக்காவிற்குள் நுழைய அகதிகளுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தாற்காலிக தடை ஒன்றை பிறப்பித்ததை அடுத்து, அகதிகளை தொடர்ந்து பாதுகாக்க அமெரிக்காவை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

சிரியாவிலிருந்து தப்பித்த வரும் பொதுமக்கள், அடுத்த அறிவிப்புஅறிவிப்பு வரும் வரை அமெரிக்காவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும், முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட ஆறு நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசாவானது மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட உள்ளது.

உள்நாட்டு மோதலிலிருந்து தப்பிப்பவர்களின் தேவைகள் என்பது பெரியதாக இருக்காது என்று ஐ.நா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

டிரம்பின் முடிவு குறித்து பிரான்ஸும் விமர்சித்துள்ள நிலையில், அகதிகளை வரவேற்பது ஒரு கடமை என்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் மார்க் அய்ரால்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்