டிரம்பை கண்டித்தார் ஏங்கெலா மெர்கல்

  • 29 ஜனவரி 2017

அமெரிக்க அகதிகள் திட்டத்தை நிறுத்திவிட்டு, 7 முஸ்லிம் நாடுகளின் மீதான மக்களுக்கு தற்காலிக தடைவிதித்திருக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் கண்டித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பதை வைத்து, குறிப்பிட வம்சாவளி மக்களை அல்லது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை பொதுவான சந்தேகத்தில் பார்ப்பதை நியாயப்படுத்த முடியாது, என்று மெர்கல் நம்புவதாக அவருடைய செய்தி தொடர்பாளர் ஸ்டெஃபென் செய்ஃபர்ட் கூறியிருக்கிறார்,

மக்களின் நாட்டை வைத்து முத்திரை குத்துவது என்பது பிளவுபடுத்தும் தன்மை கொண்டது, தவறானது என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.

போரிஸ் ஜாண்சனுக்கு அடுத்ததாக லண்டன் மேயராக வந்துள்ள சாதிக் கான் இந்த தடையை கேவலமானது என்றும் கொடூரமானது என்றும் விவரித்திருக்கிறார்,

சனிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட செயலாணை, அமெரிக்காவின் அகதிகள் திட்டம் முழுவதையும் நிறுத்தியுள்ளதோடு, இரான், இராக், லிபியா, சோமாலியா, சூடான் சிரியா மற்றும் ஏமனில் இருந்து வருவோருக்கு 90 நாட்கள் பயண தடையையும் விதித்திருக்கிறது,

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்