வலிமையான அமெரிக்க எல்லைக்காக தடை நடவடிக்கை – டிரம்ப்

  • 29 ஜனவரி 2017

அமெரிக்காவின் எல்லைகள் வலிமையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும், நாட்டுக்குள் நுழைவோரைப் பற்றிய தீவிர ஆய்வு தேவை என்றும்ம் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள டிரம்ப், தன்னுடைய நடவடிக்கைகளை நியாயப்படுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐரோப்பாவின் குடியேற்ற சூழ்நிலை மிக மோசமான நிலையை ஏற்படுத்தியிருப்பதாக டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், அதிபரின் இந்த ஆணையை நடைமுறைப்படுத்துவதில் கவனம் தேவை என்று அமெரிக்க செனட் அவையில் பெரும்பான்மையாக இருக்கும் குடியரசு கட்சியின் தலைவர் மிட்ச் மெக்கோனெல் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுக்கு எதிரான போரில் சில சிறந்த ஆதாரமாக முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் சட்டபூர்வமற்றவை, தூண்டக்கூடியவை, ஆபத்தானவை என்று உள்ளூர் தலைவர்களும், மாகாண ஆளுநர்களும் கண்டித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்