பாகிஸ்தானில் காணாமல்போன 5 செயற்பாட்டாளர்களில் 3 பேர் கண்டுபிடிப்பு

காணாமல் போய் மூன்று வாரங்களுக்கு பிறகு, பாகிஸ்தான் செயற்பாட்டாளர் அசிம் சயீத் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தன்னுடைய உயிருக்குப் பயந்து சயீத் நாட்டைவிட்டு சென்றுவிட்டதாக அவருடைய தந்தை கூறியிருக்கிறார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் காணாமல் போன 5 மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களில் இவரும் ஒருவர். இதனால், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

சிங்கப்பூரில் இருந்து பாகிஸ்தான் வந்திருந்தபோது, நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் தன்னுடைய மகனைக் கைது செய்ததாக சயீத்தின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால், உளவுத் துறை மீதான குற்றச்சாட்டை அரசு மறுத்துள்ளது.

மேலும் இரண்டு செயற்பாட்டாளர்கள் சனிக்கிழமையன்று வீடு திரும்பினார்கள். இன்னும் இரண்டு பேர் நிலை தெரியவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்