மலேசிய படகு ஒன்றில் காணாமல் போன 25 சீன குடிமக்கள் உயிருடன் மீட்பு

மலேசிய படகு ஒன்றில் காணாமல் போன 25 சீன குடிமக்களை உயிருடன் கண்டுபிடித்துவிட்டதாக மலேசியாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஆனால், அதில் இன்னும் 6 பேர் காணாமல் போயுள்ளதாக மலேசியா அரசின் அமைச்சர் டடூக் பங் யூக் மிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாவின் பிரபல சுற்றுலா தீவு ஒன்றுக்கு செல்லும் வழியில் போர்னியோவின் கடற்கரைக்கு அப்பால் படகு காணாமல் போனது.

மலேசியாவின் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் கடல் பகுதியில் பெரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

மீட்பு நடவடிக்கைகளுக்கு, சீரற்ற கடுமையான வானிலை பெரும் தடையாக அமைந்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்