அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனு ஒன்றில் மில்லியனுக்கும் அதிகமானோர் கையெழுத்து

  • 30 ஜனவரி 2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஐக்கிய ராஜ்ஜிய பயணத்தை தடுத்து நிறுத்தக் கோரும் ஒரு மனுவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்தவார இறுதியில் குடியேற்றங்களை தடுக்க அமெரிக்கா அமல்படுத்தியுள்ள சில உத்தரவுகள் சர்வதேச அளவில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந் நிலையில், இந்த மனுவில் கையெழுத்திட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

டிரம்பின் இந்தப் பயணம் குறித்து சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது தெரீசா மே அறிவித்திருந்தார்.

டிரம்பின் ஐக்கிய ராஜ்ஜிய பயணத்திட்டத்தை ரத்து செய்வதென்பது மக்களை ஈர்க்கும் நடவடிக்கையாகத்தான் இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தை ஒத்திவைக்கும்படி தொழிற்கட்சியை சேர்ந்த ஜெரிமி கோர்பைன் பிரதமர் தெரீசா மேவை வலியுறுத்தியுள்ளார்.

அரசின் இணையதளத்தில் இந்த மனுவானது இரண்டாவது மிகவும் பிரபலமான பட்டியலில் உள்ளது.

இந்த மனு குறித்து செவ்வாய்கிழமையன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க உள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்