டிரம்பின் பயணத்தடை முடிவுக்கு அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள்

  • 30 ஜனவரி 2017

அமெரிக்க அதிபராக இரண்டாவது வாரத்தை டொனால்ட் டிரம்ப் தொடங்கும் நிலையில், அவருடைய முதல் முக்கிய முடிவு குறித்து மிகப்பெரிய போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டத்தின் போது

ஏழு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளை சேர்ந்த மக்கள், அமெரிக்காவுக்கு வர தாற்காலிக தடை விதித்ததை எதிர்த்து அமெரிக்க நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதில் சில பெரிய போராட்டங்கள் விமான நிலையங்களில் நடைபெற்றன.

அதிபரின் உத்தரவை எவ்வாறு அமல்படுத்துவது என்பதில் தொடர்ந்து அங்கு குழப்பம் நிலவி வருகிறது.

ஆனால், தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் டிரம்ப், அமெரிக்காவை பாதுகாப்பாக வைப்பதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிக்க அனுமதி உள்ளவர்களுக்கு இந்தத் தடை உத்தரவு பொருந்தாது என்று உள்நாட்டு பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்